1. தீக்குச்சி
ஜோன் வோக்கர் என்பர் 1825 இல் வேதியல் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஆன்டிமனி சல்பைட்டும் பொற்றாசியம் குளோரைட்டும் சேர்ந்த கலவையில் இரும்பு சேர்த்து எரியூட்டும் கலவையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்தக் கலவையை அவர் தற்செயலாக அடுப்புக் கல்லில் தேய்த்தபோது உடனே அது பற்றி எரிய ஆரம்பித்தது. அந்தக் கலவையை உப்புத் தாளில் தேய்த்து எரியும் குச்சிகளை தயாரித்தார். அதனை தனது ஊரில் மட்டும் விற்பனை செய்தார். இதுவே தீக்குச்சி உருவான ஆரம்பக் கதையாகும்.
2. தொலைக்காட்டி
டச்சு கண்ணாடித் தயாரிப்பாளரான ‘ஹான்ஸ் லிப்பர்ஷே’ என்பவர் ஒன்றின் முன் இன்னொரு வில்லையை வைத்தால் அவைப் பொருளைப் பெரிதாக்கிக் காட்டும் என்பதைக் கண்டறிந்தார். இதனை ஒரு வருடத்தின் பின் விஞ்ஞானியும் வானியலாளருமான கலிலியோ கலிலி அறிந்தார். அதனை வைத்து ஒரு தொலைக்காட்டியை உருவாக்கினர். ஜூபிடர் கிரகத்தின் உபகோள்களை அதனை வைத்துக் கண்டறிந்தார்.
3. பற் தூரிகை
வில்லியம் அடிஸ் என்பவர் கலகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அக் காலத்தில் கிழிந்தத் துணிகளைக் கொண்டே அவர் பற்களை துலக்குவார். சிறையில் ஒரு நாள் அடிஸ் துணியால் பற்களை துலக்கும் போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது துணியால் பற்களை துடைப்பதை விட அழுத்தித் தேய்ப்பது சிறந்தது என எண்ணினார். உணவு வழங்கப்பட்ட போது ஒரு எலும்புத் துண்டை எடுத்து பத்திரப்படுத்தினார். சிறைக் காவலனின் உதவியுடன் விலங்கு உரோமங்களைப் பெற்றார். எலும்பில் துளைகள் இட்டு அதில் உரோமங்களைப் பொருத்தினார். இவ்வாறே உலகின் முதல் பற்தூரிகை உருவானது. தண்டனைக் காலம் முடிந்து விடுதலை அடைந்த அடிஸ் பற் தூரிகைகளை உருவாக்கி விற்பனை செய்து பெரும் பணக்காரரானார்.
4. சுவிங்கம்
1870களில் அமெரிக்காவில் ஹொரேஷியோ அடம்ஸ் என்பவர் தனது தந்தையுடம் பரிசோதனைளில் ஈடுபட்டு வந்தார். மெக்ஸிகோ காட்டு மரத்தின் உலர்ந்த சத்துப் பகுதியான சிக்கிள் என்பதில் இருந்து அவரது தந்தை இறப்பர் தயாரிக்க எண்ணினார். ஆனால் அம்முயற்சி வெற்றி அடையவில்லை. சிக்கிள் துண்டுகளை வாயில் போட்டு மென்றவாறு அவர்கள் சோதனைகளில் ஈடுபட்ட போது புதிய யோசனை ஒன்று அவர்களுக்கு உதயமானது. அந்த சிக்கிளை வாயில் போட்டு மெல்லும் ஒரு பண்டமாக தயாரிக்க எண்ணினார். அதன்படியே அதற்கான தொழிற்சாலையை அமைத்து சிக்கிள் கலவைக்கு இனிப்பூட்டி விற்பனை செய்தனர். இவ்வாறே சுவிங்கம் முதன் முதலில் உருவானது.
5. தையல் இயந்திரம்
எலியான் ஹொவ் என்பவரின் மனைவி துணி தைத்து சம்பாதித்து வந்தார். மனைவி தைப்பதை பார்த்துக் கொண்டிருந்த ஹொவவுக்கு தைக்கும் இயந்திரத்தை வடிவமைக்கும் எண்ணம் உருவானது. மிகவும் கடினப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின் ஒரே மாதிரியான நீளமான தையல்களைத் தைக்கும் இயந்திரத்தை உருவாக்கினார். 1845 காலப்பகுதியில் பெண்கள் கைகளால் தைப்பதை அவரது இயந்திரம் தைத்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது அவரது கண்டுபிடிப்புக்கான தேவை அதிகரித்ததது. போர் வீரர்களுக்காக ஆயிரமாயிரம் சீருடைகள் அவரது இயந்திரத்தைப் பயன்படுத்தியே தைக்கப்பட்டது. எலியான் ஹொவ் மிகப்பெரிய பணக்காரரானார்.