பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபுணரும் இலங்கையில் நாலாயிரம் குழந்தைகள் பிறப்பதற்கு தனது உன்னத சிகிச்சையால் உறுதுணை புரிந்தவருமான டொக்டர் கீதா ஹரிப்ரியா இம்மாதம் 11ஆம் திகதி ஞாயிறன்று, வெள்ளவத்தை ரோயல் மருத்துவமனை ஏற்பாடு செய்திருக்கும் மகப்பேறின்மைக்கான இலவச ஆலோசனை முகாமில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
யூரோப்பிய மருத்துவ சங்கம், பெல்ஜியம் மற்றும் யூரோப்பிய வர்த்தக சபை, பெரிய பிரித்தானியா ஆகிய அமைப்புக்களிடமிருந்து இந்தியாவிலேயே சிறந்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவர் மற்றும் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனை ஆகிய பட்டியலில் நான்காவது இடத்தையும், அதே பிரிவுகளில் தமிழ்நாடு மாநில அளவில் முதலாவது இடத்தையும் டொக்டர் கீதா ஹரிப்ரியா தலைமையிலான பிரசாந்த் செயற்கை கருத்தரிப்பு மையம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
“மகப்பேறற்ற தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. உலக நாடுகளைப் போலவே இலங்கையிலும் திருமணமாகும் பத்து தம்பதியரில் ஆறு தம்பதியர் குழந்தையின்மைக்கு முகங்கொடுக்கிறார்கள்.
அவர்கள் தங்களுடைய குறைகள் பற்றி உடனடியாக தகுதிவாய்ந்த மருத்துவர்களுடன் கலந்தாலோசனை செய்து சிகிச்சைகள் பெற்றுக்கொண்டால், அவர்களும் தங்கள் குழந்தைக் கனவை நனவாக்கிக்கொள்ள முடியும்.
“நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவருக்கு இருக்கும் பிரச்சினை பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்வது அவசியம்.
அதன் பிறகே அவர்களுக்குப் பொருத்தமான சிகிச்சைகளையும் வழங்க வேண்டும்.
அந்த வகையில், மகப்பேறின்மை பரிசோதனைகள், சிகிச்சைகள் ஆகியவற்றில் அதிநவீன கருவிகளை எனது மருத்துவமனையே தமிழகத்தில் – சில சமயங்களில் இந்தியாவிலும் கூட – முதன்முறையாக அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால்தான் எமது மருத்துவமனையில் 85 சதவீத வெற்றிவாய்ப்பை அளிக்க முடிகிறது.
“மகப்பேறின்மைக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்ற எண்ணம் அந்தக் காலத்தில் இருந்தது. அது தவறு என்பதை இப்போதைய நவீன மருத்துவம் நிரூபித்திருக்கிறது.
மகப்பேறின்மைக்கு 60 சதவீதம் ஆண்களே காரணம் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் இதை நினைத்து அவர்கள் வருந்தத் தேவையில்லை.
“உயிரணுக்களே இல்லை என்று சொல்லப்பட்ட பல ஆண்களுக்கு, அவர்களது உயிரணுக்களைக் கொண்டே வெற்றிகரமாக மகப்பேற்று சிகிச்சைகள் செய்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், செயன்முறைக் கருத்தரிப்பில் ஆண்களின் குறைபாடுகள் விரைவாகவும் உறுதியாகவும் சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே, தமது குறைபாடுகளை எண்ணி அவர்கள் மருகிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
“மருத்துவ விஞ்ஞானம் வானளவு உயர்ந்துவிட்ட போதிலும் செயன்முறைக் கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கும்.
அதாவது, பிறக்கும் குழந்தைகள் குறைபாடுகள் எதுவுமின்றிப் பிறக்குமா என்று! ஆனால், அது வீண் சந்தேகமே! செயன்முறைக் கருத்தரிப்பு மூலம் உருவான பிள்ளைகள் சுட்டித்தனமாகவும் கெட்டித்தனமாகவுமே இருப்பர்.
“என்னிடம் நீங்கள் கேட்டறிய அனேக சந்தேகங்கள் உங்களிடம் இருக்கும். அவை அனைத்துக்கும் உங்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை வழங்கவிருக்கிறேன், அதுவும் இலவசமாக! என்னைச் சந்திக்க நீங்களும் விரும்பினால், 075 4000012 என்ற கைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு உங்களது வருகையையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
“உங்களுக்கும் குழந்தை நிச்சயம் உண்டு.”