கடற்கரை மணற் தரையிலே
காற்று வாங்கி நின்றவளே
நேற்று கண்ட உன் முகத்தை
நெட்ட யுற்று நின்றேன் – கண்ணே
முந்தாகி போட்ட உன் பாத த்திலே
பித்தாகி விட்டு பிரள்கின்றேனடி
காந்தமாகி தவழ்ந்த கட்டழகில்
கட்டுண்டு தவித்தேன் என்- கண்ணே
கடல் அலையின் வேக வீச்சினிலே
உடல் நனைந்து விட்டதடி
விடலை பருவக் கோளாறினாலே
மடல் விரித்து மாண்டேனடி – பெண்ணே
உன்நாமம் என்நாவில் தவழ்ந்ததினாலே
உறவு கொண்டு விட்டேனடி
எந்நாளும் அன்பிணைப்பு வந்ததினாலே
எதிர்ப்பின்றி ஏற்றம் காணுவம் கண்ணே
அம்பாப் பாட்டு பாடி நின்றதினாலே
ஆசை கொண்டு ஆலிங்கமானதடி
மணக்கோலம் கண்டு மகிழ்ந்திடவே
மணாளன் ஆகி விட்டேன் – பெண்ணே
வெட்டவெளி வெளிச்சத்தில் ஆளிலா
நேரத்திலே
கிட்ட வந்து சொல்லிடவா சேதியை
பட்ட துயரம் பறந்தோ டிடவே
நாட்டம் கொண்டே நாம் பாடவே – கண்ணே
கச்சான் காற்று கடலடியினிலே
முல்லைப்பால் வடியுதடி
கொண்டையிலடி
மச்சாள் முறைப் பெண்ணவளே
உச்சி முகந்து உறவானேன் – பெண்ணே