Home » அமைச்சர் கெஹெலியவுக்கு பெப். 15வரை விளக்கமறியல்
தரமற்ற மருந்து இறக்குமதி விவகாரம்

அமைச்சர் கெஹெலியவுக்கு பெப். 15வரை விளக்கமறியல்

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு

by Damith Pushpika
February 4, 2024 6:30 am 0 comment

முன்னாள் சுகாதார அமைச்சர் கெெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்தினம் (02) கைது செய்யப்பட்ட சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, நேற்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தரமற்ற மருந்து இறக்குமதி வழக்கு தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சரிடம் 10 மணிநேரத்துக்கும் மேலாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பிலேயே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பெற்றுக்கொடுக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division