Home » Visa Accelerator நிகழ்ச்சித் திட்டம் 2024 Fintechs இடமிருந்து விண்ணப்பம் கோரல்

Visa Accelerator நிகழ்ச்சித் திட்டம் 2024 Fintechs இடமிருந்து விண்ணப்பம் கோரல்

by Damith Pushpika
February 4, 2024 6:00 am 0 comment

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழும் Visa விண்ணப்பங்களுக்கான திறந்த அழைப்புடன் Visa விரைவுப்பொறி Visa Accelerator] நிகழ்ச்சி திட்டத்தின் நான்காவது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Visa வின் கொடுப்பனவு நிபுணர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம், இலங்கையில் அபிவிருத்தியின் ஆரம்பத்தில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். 2024 பதிப்பு புதிய வாய்ப்புப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது – அதாவது செயற்கை நுண்ணறிவு (AI), உலகளாவிய பண நகர்வு மற்றும், நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கான டிஜிட்டல் ரீதியிலான ஏற்றுக்கொள்ளல் (MSMBs) மற்றும் உட்பொதிக்கப்பட்ட நிதி போன்ற செயற்பாடுகளில் எதிர்காலத்துக்கான நம்பகத்தன்மையை ஏற்படுத்தல் போன்றவற்றில் தனது கவனத்தை செலுத்துகிறது.

முக்கிய விரிவாக்க கட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், தயாரிப்புகளுக்கான தீர்வு மற்றும் விரைவான வணிக மயமாக்கல், சாத்தியமான ஒத்துழைப்பு மற்றும் விரைவான வளர்ச்சியுடன் இந்நிறுவனங்களை மேம்படுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும். ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப நிலை நிறுவனங்களின் குழு, இந்த திட்டத்தின் ஊடாக, கொடுப்பனவுகளுக்கான சூழல் முறைமையில் வளர்ந்து வரும் சவால்களை எடுத்தியம்பும். அத்துடன் அவர்கள் இணை அபிவிருத்தி,சோதனை மற்றும் புதிய தீர்வுகளை செயற்படுத்துவதுடன் மற்றும் நிதி நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் டிஜிட்டல் பங்காளர்கள் Visa வின் விரிவான வலையமைப்பைப் பயன்படுத்தி உறுதியான சந்தைக்குச் செல்லும் வாய்ப்புகளைத் தொடரலாம். இந்தத் திட்டத்தின் இந்தப் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 8, 2024 அன்று முதல் கோரப்பட்டுள்ள நிலையில் , இவற்றின் முடிவு திகதி மார்ச் 8, 2024 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப நிலை நிறுவனங்கள் மே முதல் நவம்பர் 2024 வரை இத் திட்டத்தில் ஈடுபடுவதுடன் இது பின்னர் செய்முறை தினத்துடன் முடிவடையும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division