Home » கண்ணீர் மூன்று வகை

கண்ணீர் மூன்று வகை

by Damith Pushpika
February 4, 2024 6:03 am 0 comment

அழுகையை அடக்குவதால் ​ேஹார்மோன் பிரச்சினைகள் ஏற்பட்டு உடல் எடை கூடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால், நாம் சிரிக்கும்போது எவ்வளவு கலோரிகள் வெளியேற்றப்படுகின்றனவோ அதே அளவு கலோரிகள் நாம் அழும்போதும் நம் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

நம் கண்ணீர் பார்ப்பதற்கு (!)ஒரே மாதிரி இருந்தாலும், இதிலும் 3 வகைகள் இருக்கின்றன.

Basal tears – அடிப்படை கண்ணீர் – நம் கண்களை எப்போதும் ஈரப்பசையுடன் வைக்க உதவுகிறது.

Reflexive tears – எதிர்வினைக் கண்ணீர் – கண்களில் தூசு விழும்போதும், வெங்காயம் நறுக்கும்போதும், இருமும்போதும், தும்மும்போதும் வரும் கண்ணீர்.

Psych tears – உணர்வுசார் கண்ணீர் – கோபம், மன அழுத்தம், பயம், துக்கம் இவை மட்டுமல்ல அளவுகடந்த சந்தோசத்தாலும் வரும் கண்ணீர். இந்த வகைக் கண்ணீர், மன அழுத்தத்தாலும் கவலையினாலும் நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

உணர்வுசார் கண்ணீர், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. அழுதுமுடித்தவுடன் புத்துணர்ச்சியுடனும் லேசான மனதுடனும் இருக்க இதுவே காரணம்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division