128
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் பூதவுடல் இன்று (28) புத்தளம் ராஜகதலுவ கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இவரது பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக சிலாபம், ஆராச்சிக்கட்டுவவிலுள்ள இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது 48 வயதான சனத் நிஷாந்த பெரேரா நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.