Home » 2024 க்குள் துறைமுகத்தில் 20,000 வேலைவாய்ப்புகள்

2024 க்குள் துறைமுகத்தில் 20,000 வேலைவாய்ப்புகள்

சுமார் 15,000 நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு

by Damith Pushpika
January 28, 2024 7:00 am 0 comment

2024ஆம் ஆண்டு இறுதிக்குள் துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய சுமார் 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியுமென துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சட்டத்தரணி நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக முனையத்தின் பணிகளையும் அதானி நிறுவனம் பூர்த்தி செய்து வருவதாகவும், 580 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், துறைமுகத்திலேயே சுமார் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அது தொடர்பாக சுமார் 15,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதிகரித்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை பெறக்கூடிய விதத்தில் வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியார்துறை மூலம் அதிகளவில் உருவாக்கப்படுமென்றும் கூறினார்.

குறிப்பாக, துறைமுக அதிகாரசபை கடந்த வருடம் 90 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதிலிருந்து ஊழியர் சம்பளம், அரச வரிகள் மற்றும் செயற்பாடுகளென அனைத்து செலவுகளையும் தவிர்த்து, 23 பில்லியன் ரூபா அல்லது 2,300 கோடி ரூபா நிகர இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் முனையங்களுக்கிடையில் போட்டி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினூடாக வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் ஊழியர்களுக்கு அதிக நன்மைகள் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division