2023 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கான எடிசன் திரை விருதுகள் தேர்வு பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் www.edisonawards.in இணையதளம் மூலம் தங்களுக்கு பிடித்தமான திரை கலைஞர்களுக்கு இணையவாக்குகள் மூலம் வாக்களித்து வருகின்றனர்.
பல்வேறு பிரிவுகளில் தேர்வு பட்டியலில் அதிகப்படியான இடம் பிடித்திருக்கும் திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர், விஜய் நடித்த லியோ திரைப்படங்கள் இடம் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் 40 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்திருந்தனர்.
இவ்வாண்டு தேர்வுப் பட்டியல் வெளியிட்ட ஒரு வாரத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். இவ்வாக்களிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாகும் என சமூக வலைதள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் அதிகப்படியான வாக்குகளை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
எடிசன் விருதுக் குழு தலைவர் செல்வகுமார், “இன்னும் எடிசன் விருதுக்கான விளம்பர யுக்திகளை ஆரம்பிப்பதற்கு முன்பே 10 லட்சம் பேர் வாக்களித்திருப்பது பெருமைக்குரியதாகும். மேலும் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் பல்வேறு நாடுகளில் உள்ள நாளிதழ்கள், பண்பலை தொலைக்காட்சிகள், இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரம் செய்ய உள்ளோம். அதன் பிறகு கடந்த ஆண்டை விட அதிகப்படியான வாக்குகள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்ட விருதாக மக்களால் கொண்டாடப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்புக்கு : +60166167708.