Home » கல்வி நடவடிக்கைகள் Zoom இல் ஆரம்பம்
தென்கிழக்கு பல்கலையின்

கல்வி நடவடிக்கைகள் Zoom இல் ஆரம்பம்

by Damith Pushpika
January 21, 2024 7:20 am 0 comment

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை (22) முதல் சூம் (Zoom) செயலி மூலம் மெய்நிகர் (online) வாயிலாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அப் பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ.நெளபர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அண்மையில் பெய்த அடை மழையால் டி.எஸ்.சேனநாயக்க சமுத்திரத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால், தென்கிழக்கு பல்கலைக்கழகம் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் இப்பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளையிலிருந்து சூம் செயலி மூலம் மெய்நிகர் வாயிலாக தற்காலிகமாக ஆரம்பிக்க பல்கலைக்கழக நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக சூழல் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர், வழமையான கல்வி நடவடிக்கைகளை பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடத்துவது தொடர்பான தகவல் ஊடகங்கள் வாயிலாக மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தில் நடைபெறுகின்ற பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான கல்வி நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் இதன் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

(அம்பாறை மாவட்ட குறூப் நிருபர்)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division