ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். ஆனால் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா கூறியதாவது: “எப்போதும் நம் காதில் விழக்கூடிய விஷயம், ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பதுதான். ஆனால் மிக அரிதான ஒரு விஷயம் என்னவென்றால் மிகவும் வெற்றிகரமாக இருக்கும் பெண்களுக்கும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களுக்கும் பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார்.
என்னுடைய வாழ்க்கையில் சினிமா தவிர நான் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் பின்னால் என் கணவர் இருக்கிறார். நான் அவரை சந்தித்த பிறகு நான் இன்னும் மிகப்பெரிய விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும் என்றுதான் அவர் எனக்கு கற்று கொடுத்துள்ளார். என்றைக்குமே இதை ஏன் செய்கிறீர்கள்? அதை ஏன் செய்கிறீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டதில்லை. மாறாக இதை “ஏன் செய்யாமல் இருக்கிறீர்கள்?” “ஏன் இதோடு நிற்க வேண்டும்?” என்று தான் கேட்பார். எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார்” இவ்வாறு நயன்தாரா பேசினார்.