இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நிலைபெறுதகு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதன் மூலம், நிலைபெறுதகு கணக்கியல் தரநிலை சபை (SASB -Sustainability Accounting Standards Board) மற்றும் மொபைல் தொலைத்தொடர்பு கட்டமைப்பிற்கான உலகளாவிய அமைப்பு (GSMA – Global System for Mobile Communications Association) ஆகியன உட்பட உலகளாவிய அறிக்கையிடல் முன்முயற்சி (GRI -Global Reporting Initiative) அறிக்கையிடல் தரநிலைகள் சகிதம் தெற்காசியாவில் முதன்மை தொலைத்தொடர்பு சேவை வழங்குனர் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
உலகளவில் நிலைபெறுதகு அறிக்கையிடலுக்கான தங்கத் தரத்தை கொண்டதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள GRI தரநிலைகளுக்கு இணங்கும் வகையில் 15 ஆண்டுகால பாரம்பரியத்தை கட்டியெழுப்புவதுடன், 2023 இல் SASB மற்றும் GSMA தரநிலைகளையும் டயலொக் ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, தொலைத்தொடர்பு துறையில் உள்ள தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அதன் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இவ்வாறு இந்த கூடுதல் அறிக்கையிடல் கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம், டயலொக் தனது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG environmental, social and governance) ஆகிய நிகழ்ச்சி நிரல் மற்றும் அறிக்கையிடல் நடைமுறைகளை மேலும் மேம்படுத்துவதை இலக்காக கொண்டு செயற்படுகின்றது எனலாம்.