Home » வேண்டுதல்

வேண்டுதல்

by Damith Pushpika
January 14, 2024 6:50 am 0 comment

 

விழிகளில் ஈரம் கொண்டு
விண்ணப்பம் செய்கிறேன் இறைவா – எம்
வழிகளில் வனப்பைப்
பெருக்கிட வாய்ப்பைத்
தந்துவிடு விரைவா

கஷ்டங்களும் கடினங்களும்
கலந்தே வருகின்றன இறைவா – எம்
காலங்கள் இருக்கையிலே இதற்கு
கடிவாளம் இடணும் விரைவா

தேசத்தின் எதிர்காலமிங்கு
தெம்பாய் ஆகணும் இறைவா – எம்
நேசத்தில் புதிர் களைந்து – மகிழ்வாய்
நிமிஷங்கள் மாறணும் விரைவா

நிலைமைகள் யாவும் சீராயமைந்து
நிர்க்கதிகள் விலகிடணும் இறைவா
தலைமைகள் யாவரும் ஒன்றாயிணைந்து
தக்க உபாயம் தந்திடணும் விரைவா.

உசனார் எம்.பஷீர், ஏறாவூர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division