130
உழவன் ஓரு வீரன்
ஏரெடுத்து எடுப்பாக
எருது ரதம் மோட்டி
புழுதி கிளம்பப்
புவிகீறிக் கிழித்து
போராட வந்த
உழவன் ஓர் வீரன்!
பகல் சுட்டென்ன
மழையடித் தென்ன
கூதல் பிடித்தென்ன
எதையும் எதிர்த்துப் போராடும்
உழவன் ஓரு வீரன்
நெல் விதைப்பான்!
நீர் இறைப்பான்
பயிர் வளர்ப்பான்
பகலிரவாய் – அதைப்
பாதுகாக்கும்
உழவன் ஓரு வீரன்!
அர்த்த ராத்திரியில்
ஆனை வந்தால் லென்ன
பூனை போல் வோடான்!
அதிரடி வெடி கொழுத்தி
அதை விரட்டியடிக்கும்
உழவன் ஓர் வீரன்!
கத்தியெடுப்பான் – முற்றியது
கதிர்க்கத்தைக் கழுத்தறுப்பான்!
புதிர் எடுப்பான்
பகலவனுக்கே – அதைப்
பொங்கிப் படையவிடும்
உழவன் ஓரு வீரன்!