134
பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 13.5 லீற்றர் கொழுப்பை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் இலங்கையில் முதன்முறையாக சாதனை புரிந்துள்ளனர். கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலேயே இச்சாதனை இடம்பெற்றது.
ஓய்வுபெற்ற ஆசிரியையும் ஒரு பிள்ளையின் தாயாருமான 61 வயதுடைய இப்பெண்ணின் வயிறு பெரிதாக தொங்கிய நிலையில் அவர் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு சென்ற போது, Liposuction என்ற சத்திர சிகிச்சை சுமார் மூன்று மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்டதாக, விசேட சத்திர சிகிச்சை நிபுணர் ஜயவர்தன தெரிவித்தார்.
சத்திர சிகிச்சையின் பின்னர் இவர் நலமுடன் இருப்பதாகவும், அவ்வைத்தியர் தெரிவித்தார்.