தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றி வருபவர், பீட்டர் ஹெய்ன். தமிழில் அந்நியன், எந்திரன், கஜினி, பாகுபலி உட்பட பல பிரம்மாண்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இவர், இப்போது, பான் இந்தியா படம் ஒன்றில் நாயகனாக அறிமுகமாகிறார். ட்ரெண்ட்ஸ் சினிமாஸ் ஜெ.எம். பஷீர், எம்.டி சினிமாஸ் ஏ.எம் சவுத்ரி தயாரிக்கும் இந்தப் படத்தை மா.வெவற்றி இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை அமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுக உள்ளனர். இதில் நடிப்பது பற்றி பீட்டர் ஹெய்ன் கூறும்போது, “முதலில் எனக்கு நடிப்பு வராது என்று சொல்லி தவிர்த்தேன். இந்தக் கதைக்கு நீங்கள்தான் சரியாக இருப்பீர்கள் என்று இயக்குநர் உறுதியாக இருந்தார். பிறகு கதையில் சில மாற்றங்களைச் செய்து இப்போது நடிக்கிறேன். இதில் காட்டுவாசியாக நடிக்கிறேன். புதுமையான ஆக் ஷன் படமாக இது இருக்கும். இதற்கு தனியாகப் பயிற்சி எடுத்து வருகிறேன்” என்றார்.
நாயகனாக பீட்டர் ஹெய்ன்
112
previous post