சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் வரும் பெப்ரவரி 2-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோத்துள்ளார். இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள படத்துக்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘விட்னஸ்’ பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கவுண்டமணி செந்திலின் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற பெயரை தலைப்பிட்டிருப்பதன் மூலம் படம் காமெடி ஜானரில் உருவாவது உறுதியாகியுள்ளது. படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் வரும் பெப்ரவரி 2-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.