உலகளாவிய ரீதியில் சவூதி அரேபிய அரசாங்கம் அறபு நாடுகள், இஸ்லாமிய நாடுகள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி பல்வேறு வகையான உட்கட்டமைப்பு வசதிகள், மனிதாபிமான உதவிகளை காலகாலமாக செய்து வருகின்றமை வெளிப்படையான விடயமாகும்.
அதன் ஓர் அங்கமே “சவூதி அரேபிய மன்னரின் ஹஜ் மற்றும் உம்றாவுக்கான விஷேட விருந்தாளிகள்” எனும் திட்டமாகும்.
இதனை சவூதி அரசாங்கம் பலவருடங்களாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் (2024ஒ) உலகலாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேருக்கு “இலவச உம்றா” வாய்ப்பினை வழங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் இலங்கை மக்களும் உள்வாங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இத்திட்டம் வருடா வருடம் சவூதி அரேபிய இஸ்லாமிய அலுவல்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சின் மேற்பார்வையுடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
அஷ்ஷெய்க் ஏ.டப்ளியு.எம்.அல்தாப் (மதனி)