174
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான சேனுகா திரேனி செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (05) தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கையளித்தார். இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது (எக்ஸ்) டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னராக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட பதவி வகித்திருந்தார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, சேனுகா திரேனி செனவிரத்னவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.