Home » ஜனாதிபதியுடன் கில்மிஷா சந்திப்பு

ஜனாதிபதியுடன் கில்மிஷா சந்திப்பு

by Damith Pushpika
January 7, 2024 6:40 am 0 comment

இந்தியாவின் ‘Zee Tamil’ சரி கம ப ‘Little Champs 2023’ போட்டியில் மகுடம் சூடிய சிறுமி கில்மிஷா உதயசீலன் தனது குடும்பத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

14 வயதான சிறுமி கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்பதோடு, இலங்கை சிறுமியொருவர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சிறுமி கில்மிஷா உதயசீலன் நாட்டுக்கு தேடித்தந்த புகழுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவரது கல்வி செயற்பாடுகள் மற்றும் இசை வாழ்விலும் வெற்றி பெற ஆசிகளை தெரிவித்தார்.

இதன்போது கில்மிஷா ஜனாதிபதி முன்னிலையில் பாடல் ஒன்றையும் பாடினார். அத்துடன், தனது குடும்பத்தாருடன் சந்தித்து ஷெல்பியும் எடுத்துக்கொண்டார். யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் போதே, கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி தனது வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division