Home » வெற்றிகரமாக இடம்பெற்ற SLT Training Centre பட்டமளிப்பு விழா

வெற்றிகரமாக இடம்பெற்ற SLT Training Centre பட்டமளிப்பு விழா

by Damith Pushpika
January 7, 2024 6:23 am 0 comment

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT Training Centre (SLTTC), அண்மையில் தனது நான்காவது வருடாந்த பட்டமளிப்பு வைபவத்தை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுத்திருந்தது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் Hertfordshire பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் BEng (Hons) பட்டப்படிப்பு மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் Pearson இனால் வழங்கப்படும் BTEC HND Electrical and Electronic Engineering மற்றும் Pearson BTEC HND Computing ஆகிய பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த SLTTC பட்டதாரிகள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

கல்வி மற்றும் திறன் விருத்தி ஆகியவற்றில் கல்வியகம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் மாணவர்கள் உலகத் தரம் வாய்ந்த தகைமைகளை பூர்த்தி செய்திருந்தமையால் இந்த பட்டமளிப்பு வைபவம் SLTTC க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய இராஜ்ஜியத்தின் Hertfordshire பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல், பொறியியல் மற்றும் கணனி விஞ்ஞான பாடசாலையின் பீடாதிபதி பேராசிரியர் டேனியல் மெக்கிளவுஸ்கி கலந்து கொண்டார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division