மனிதாபிமானமற்றவர்களே
உங்கள் துரோகத்திற்கு
பிஞ்சும் இல்லை
முத்தலும் இல்லையே
கொத்துக் கொத்தாய் சீரழிக்கும்
உங்கள் கொலை வெறியின்
நியாயமற்ற தாண்டவத்தின் மீறல்
பலஸ்தீனத்தினதும் காசாவினதும்
முத்துக்களின் வெற்றியே.
மனிதனாக பிறந்தது தப்பா
அல்லது பலஸ்தீனில்
பிறந்தது தப்பா
துரோகத்தனத்தின் தாண்டவத்தில்
ஆடித் திரிகின்றீர்களே
கொலை வெறிக்கு பிஞ்சுகளும்
கர்ப்பிணிகளும் தான் என்றால்
மன நோய் பிடித்த துரோகிகளாகி
விட்டீர்கள் என்பதே உண்மை.
கொலை வெறித்தனமும் துரோகமும்
வெற்றி தராது என்பதே யதார்த்தம்.
தோல்வி என்பது தலைவிதியே
தியாகமும் இறை நம்பிக்கையும்
கொண்டவர்கள்தான்
காசாவின் உறவுகள்
அந்த உறவுகள் வெற்றியின்
நட்சத்திரங்கள் என்பதே உண்மை.
நீ பறிக்கும் ஒவ்வொரு ஆத்மாவும்
உன் வம்சத்தின் அழிவிற்கானதே
நீ பறிப்பது உயிராக இருக்கலாம்
அவர்கள் செல்வது சொர்க்கமே
அது புரியாத
முட்டாள்களாகிவிட்டீர்கள்
பலஸ்தீன உறவுகளின்
இறை நம்பிக்கையும் துணிச்சலும்
சுவர்க்கத்தின் விருந்தாளிகளே
நீ படுகுழியின்
ஆழத்தை நோக்குகிறாய்
அவர்கள் வெற்றியின் ஆழத்தை
நோக்கி பயணிக்கின்றார்கள்.
நீ ஆயுதத்தால் மரண
பயத்தை தணிக்கின்றாய்
பலஸ்தீன முத்துக்கள்
கலிமாவினால்
அச்சத்தை போக்குகின்றன.
நீ போடும் ஆட்டத்தை
நிராயுதபாணியாக போட்டுப்பார்
பலஸ்தீன வீரர்கள்
வானத்து நட்சத்திரங்கள்போல்
மின்னிக் காட்டுவார்கள்.
வெல்லலாம் என்ற பகற் கனவுடன்
நீ தடுமாறுகின்றாய்.
அவர்களோ படைத்த
இறை நம்பிக்கையில்
வெற்றியை நோக்கிய
வீரர்களாகின்றனர்.
பலஸ்தீன இரத்த
வாடையில் நீங்கள்
அந்த முத்துக்களோ
சுவர்க்க வடையில்
துணிச்சலான வீரத் தியாகங்கள்
நீங்களோ மரணத்துக்கு அஞ்சி
ஆயுதத்தின் பின்னால்
ஒளியும் கோழைகளே.
உயிர்த் தியாகம்
வெற்றியின் படிகளே
இறைவனோடு என்றும் நாங்கள்
என்பதே காசா உறவுகளின்
மன நிறைவு