Home » பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணித்தால் ரூ. 10,000 அபராதம்

பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணித்தால் ரூ. 10,000 அபராதம்

25 சதவீதமானோர் பயணச்சீட்டின்றி பயணம்

by Damith Pushpika
December 31, 2023 7:50 am 0 comment

பயணச்சீட்டின்றி ரயில்களில் பயணிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் அபராதத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.சி.பண்டார தெரிவித்தார்.

ரயில்களில் பயணிப்பவர்களில் 25 சதவீதமானோர் பயணச்சீட்டு பெறாமல் பயணம் செய்வதாலேயே இந்த அபராத அதிகரிப்பை செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

அடுத்தாண்டு முதல் தனியார் துறையினரது ஒத்துழைப்புடன் ரயில் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும். ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமான முறையில் குடியிருப்பவர்களிடமிருந்து வரி அறவிடுவதற்கு புதிய வழிமுறை ஒன்று செயற்படுத்தப்படும்.

ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச்சீட்டு பெறாமல் திருட்டுத்தனமான முறையில் பயணிக்கின்றனர். இதனால் ரயில்வே திணைக்களம் நாளாந்தம் சுமார் 30 மில்லியன் ரூபா வருமானத்தை இழக்கிறது. ஆகவே பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களிடமிருந்து அறவிடும் அபராதத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவிலிருந்து மேலதிகமாக 20 ரயில் என்ஜின்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் ரயில் சேவையை வினைத்திறனான முறையில் முன்னெடுக்க முடியும்” என்றார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division