இந்தியாவில் சபரிமலை யாத்திரை மற்றும் புத்தகாயா போன்ற யாத்திரைகளை மேற்கொள்ளும் இலங்கையர்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் விசேட மருத்துவர் சிந்தன பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு திருத்தலங்களுக்கும் யாத்திரை செல்பவர்கள் முகக்கவசம் அணிந்து உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களின் போது சுகவீனம் ஏற்படுமானால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது முக்கியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் மீண்டும் கொரோனா திரிபு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதால், நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலும் நபர்களிடம் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் ரோஹித முதுகல தெரிவித்துள்ளார். அதன் மூலம் நாட்டில் வைரஸ் திரிபு பரவல் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா திரிபு, தற்போது சளி போன்ற சிறு நோய்களாகவே ஏற்படுகின்ற காரணத்தால் பரிசோதனை மேற்கொள்வதற்கான அவசியம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்