Home » இந்தியாவிலிருந்து 06 மில்லியன் முட்டைகளுடன் கப்பல் வருகை

இந்தியாவிலிருந்து 06 மில்லியன் முட்டைகளுடன் கப்பல் வருகை

இன்று துறைமுகத்தை வந்தடையும்

by Damith Pushpika
December 31, 2023 6:20 am 0 comment

இந்தியாவிலிருந்து மேலும் 06 மில்லியன் முட்டைகளுடன் கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த முட்டைகள் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியாக உள்ள சதொச வர்த்தக நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். இதேவேளை, வற் வரி அதிகரிப்பினூடாக தங்களது உற்பத்தி செலவு அதிகரிக்கா விட்டால் எதிர்வரும் மாதங்களில் முட்டை ஒன்றை 30 ரூபா முதல் 35 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்ய முடியுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division