Home » ஓய்வூதிய பணிக்கொடை நிலுவை கொடுப்பனவு அனைத்தும் விடுவிப்பு
2023 டிசம்பர் 19ஆம் திகதி வரையிலான

ஓய்வூதிய பணிக்கொடை நிலுவை கொடுப்பனவு அனைத்தும் விடுவிப்பு

by Damith Pushpika
December 31, 2023 6:00 am 0 comment
  • 2023 இல் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கான நிதியும் விடுவிப்பு
  • நிதி அமைச்சு நேற்று அறிவித்தது
  • 25 ஆண்டுகளில் ஒரு வருடத்துக்குள் இந்த ஆண்டுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் 
    வழங்கப்பட்ட ஒரே ஆண்டாக 2023 அமைவதாக தெரிவிப்பு

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதமாகும் போது அதற்கு முந்தைய 18 மாதங்களுக்கும் மேலாக சேர்ந்திருந்த மற்றும் செலுத்த வேண்டிய ஓய்வூதியப் பணிக்கொடையின் நிலுவைத் தொகை உட்பட 2023ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதிவரை அன்றைய திகதியில் ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளுக்கு ஓய்வூதிய பணிக்கொடையை முறையாக செலுத்துவதற்கு தேவையான நிதியை திறைசேரி விடுவித்துள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2023 வரவு -செலவுத் திட்ட விதிகளுக்குட்பட்டு, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15 வரையில் அனைத்து அரச நிறுவனங்களால் சான்றளிக்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளுக்கும் அவசியமான நிதியை விடுவிக்கவும் திறைசேரி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படியே ஓய்வூதிய பணிக்கொடை நிலுவைத் தொகை உட்பட 2023ஆம் ஆண்டு டிசம்பர் 19வரை, ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை முறையாக செலுத்துவதற்கு தேவையான நிதியை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில் ஒரு வருடத்துக்குள் இந்த ஆண்டுக்கான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்ட ஒரே ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division