இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு லிரிக் எழுதியவர் பிரியன். இவர் மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, உசுமுலாரசே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். பிரியன் ‘அரணம்’ படம் வாயிலாக ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.டிக்டாக், இன்ஸ்டாகிராம் வாயிலாக பிரபலம் ஆனவர் அமலா ஷாஜி. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ போடும் இவருக்கு நான்கு மில்லியன் அளவிற்கு பாலோயர்கள் உள்ளனர். டான்ஸ் ஆடி வீடியோ போடுவது. ரீல்ஸ் செய்வது போன்றவை மூலமாக ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் அமலா ஷாஜி. இவர் குறித்து பாடலாசிரியர் பிரியன் பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் சலசலப்பை கிளப்பி வருகிறது.அரணம் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பிரியன், இரண்டு நிமிட பாடலுக்கு டான்ஸ் ஆட இன்ஸ்டாவில் நடனமாடும் சென்னையை சார்ந்த பெண் ரூ.50 ஆயிரம் கேட்கிறார். 30 செகண்டுக்கு நடனமாட கேரளாவை சார்ந்த பெண் இரண்டு லட்சம் கேட்கிறார் என்று கூறினார். அவரின் இந்த பேச்சை கேட்டு மேடையில் உள்ளவர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.மேலும், பிரியன் இந்த இரண்டு லட்சம் பணத்தை எங்கள் கலைஞர்களிடம் கொடுத்தால் விடிய விடிய வேலை பார்ப்பார்கள் என்றார். அப்போது மேடையில் உள்ளவர்கள் அவர் யார் என சொல்லுங்கள் என கேட்டனர். அதனை தொடர்ந்து அவர் வேற யாரும் இல்லை அமலா ஷாஜி தான் என கூறினார் பிரியன். அவர் பேசியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
30 செகண்ட் டான்ஸ் வீடியோவுக்கு 2 லட்சம்
47
previous post