Home » யூனியன் அஷ்யூரன்ஸ் விருது வழங்கலில் வெற்றியாளர்களின் சாதனைகள் கௌரவிப்பு

யூனியன் அஷ்யூரன்ஸ் விருது வழங்கலில் வெற்றியாளர்களின் சாதனைகள் கௌரவிப்பு

by Damith Pushpika
December 31, 2023 6:08 am 0 comment

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், பெருமளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த மத்திய வருட விருதுகள் 2023 நிகழ்வை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வினூடாக, 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த ஆலோசகர்கள், பிராந்தியங்கள் மற்றும் வலயங்கள் போன்றன கௌரவிக்கப்பட்டிருந்தன.

மத்திய வருட விருதுகள் வழங்கும் நிகழ்வில் 250 க்கும் அதிகமான வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் யூனியன் அஷ்யூரன்ஸ் குடும்பத்தினுள் எய்தியிருந்த விசேட சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் அமைந்திருந்தன. பிரதான விருதை வெற்றியீட்டியவர்களில், தேசிய புதிய வியாபார சம்பியன் – புதிய ஆலோசகர் பிரிவு, பொரளை பிராந்தியத்தின் சி.என்.எஸ்.பெர்னாண்டோ பெற்றுக் கொண்டதுடன், தேசிய புதிய வியாபார சம்பியன் பிரிவின் வெற்றியாளராக சிலாபம் பிராந்தியத்தின் சி. அப்புஹாமி பெற்றுக் கொண்டார். சிறந்த பிராந்தியமாக குருநாகல் 1 பிராந்தியம் – வட மேல் 2 வலயம் தெரிவு செய்யப்பட்டதுடன், வடக்கு 2 வலயம் பாரிய பிரிவில் சிறந்த பிராந்தியத்துக்கான விருதை பெற்றுக் கொண்டது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division