Home » விக்ரம் 62 படப்பிடிப்பு எப்போது?

விக்ரம் 62 படப்பிடிப்பு எப்போது?

by Damith Pushpika
December 24, 2023 6:21 am 0 comment

பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் ஜன.26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமாருடன் இணைகிறார். விக்ரம் நடிக்கும் 62-வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரியா ஷிபு தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பு டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. திருத்தணி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division