Foxfire (அல்லது) Fairy Fire என்றொரு அதிசய பூஞ்சை வகை இருக்கிறது. இது இரவு நேரத்தில் ஒளிரும் தன்மை உடையவை. இப் பூஞ்சைகள் உயிரிழந்து மட்கிக்கொண்டிருக்கும் மரங்களில் வளரும்.
இவை எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும், இனப்பெருக்கத்துக்காக பூச்சிகளைத் தங்கள் பக்கம் கவர்ந்து இழுக்கவும் ஒளியை உமிழ்கின்றன. பூஞ்சைகளின் உடலில் இருக்கும் வெவ்வேறு வேதியியல் மூலக்கூறுகள் ஒன்று சேர்வதே ஒளியின் காரணம். இவற்றிலிருந்து வரும் ஒளிக்கு வெப்பம் தேவைப்படுவதில்லை..அதேபோல், அவை வெப்பத்தை வெளிவிடுவதும் இல்லை.
இதனால், இந்த ஒளியை அறிவியல் வல்லுனர்கள் “Cold Light” என்று அழைக்கின்றனர். ஒருவர் வாசிக்கத் தேவையான அளவு வெளிச்சத்தை உமிழ்கின்றன இந்த அதிசய பூஞ்சைகள். சுற்றுச் சூழலில் ஏற்படும் அசுத்தம் காரணமாக, குறைவான வெளிச்சத்தைத் தருகின்றன சில பூஞ்சைகள்.
பூஞ்சைகள் மட்டும் இப்படி ஒளியை உமிழ்வதில்லை. நமக்குத் தெரிந்த நாம் பார்த்து பழக்கப்பட்ட “மின்மினிப் பூச்சி” கூட வெளிச்சத்தை உமிழும் உயிரினம் தான். இந்த பட்டியலில் சில பக்டீரியாக்களும், ஜெல்லி மீன்களும் மற்றும் சில கடல் வாழ் உயிரினங்களும் கூட அடங்கும்.