Home » சமுத்திரத்தின் அழகை தனித்துவமாக அனுபவித்து மகிழ்வதற்கான வாய்ப்பு
பெந்தோட்டை EKHO Surf

சமுத்திரத்தின் அழகை தனித்துவமாக அனுபவித்து மகிழ்வதற்கான வாய்ப்பு

by Damith Pushpika
December 24, 2023 6:55 am 0 comment

புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு முற்றிலும் புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் பெந்தோட்டை EKHO Surf, அதன் தனித்துவமான, விசாலமான மற்றும் தங்குதடையற்ற சமுத்திரக் காட்சியை அனுபவிக்குமாறு பிரயாணிகள், விடுமுறை செல்பவர்கள் மற்றும் சமுத்திரத்தை நேசிப்பவர்களுக்கு அழைப்பு விடுகின்றது. 2023 டிசம்பர் 19 அன்று உத்தியோகபூர்வமாக மீளவும் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் டிசம்பரில் சுற்றுலாப் பருவத்தின் உச்சியில், மிகவும் நேர்த்தியான தருணமொன்றில், இலங்கையின் அழகிய கடற்கரை அழகின் குன்றாத மகிமையுடன், நெகிழ்திறன் மற்றும் பரிமாணத்தின் வரலாறாக தலைநிமிர்ந்து நிற்கின்றது.

தகதகவென மின்னும் சூரிய அஸ்தமனம், பஞ்சைப் போன்ற மணல், நன்கு இட வசதிகள் கொண்ட அறைகளுடன் பரந்த புல்வெளி, புத்தம்புதிய கடலுணவு வகைகள் ஆகியவற்றைக் கொண்ட EKHO Surf, உண்மையில் வெப்பமண்டலத்திலிருந்து சற்று விலகி, ஓய்வாக பொழுதைப் போக்க இடமளிக்கின்றது.

1972 ஆம் ஆண்டிலிருந்து இயங்க ஆரம்பித்து, செழிப்பான வரலாற்றைக் கொண்ட ஹோட்டலின் சிறப்பு தொடர்ந்து மேம்பட்டதுடன், EKHO Surf இன் பயணம் அன்பின் உழைப்பினால் ஆனது. வெறுமனே ஒரு ஹோட்டலைத் தோற்றுவிப்பது என்பதற்கும் அப்பால், இலங்கையின் அழகு மற்றும் அரவணைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, அதில் திளைக்கச் செய்யும் அனுபவத்தை வழங்குகின்றது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division