2013 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், தேசிய மொபைல் பணச் சேவை வழங்குநரான mCash, இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவு முறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், பணப்புழக்கமில்லாத எதிர்காலத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியிருந்தது. இந்த ஆண்டு, SLT-MOBITEL இன் முன்னணி மொபைல் நிதிச் சேவைகள் கட்டமைப்பான mCash, தனது 10 வருட புத்தாக்கமான செயற்பாடுகளின் பூர்த்தியை கொண்டாடுகின்றது. தெற்காசியாவில் துரிதமாக மேம்பட்டுவரும் நிதித் தொழில்நுட்ப பகுதியாக அமைந்திருக்கச் செய்வதில் இலங்கையை மாற்றியமைக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தது.
நிதித் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகள் தொழிற்துறையில் mCash முன்னணியில் திகழ்வதுடன், தொடர்ச்சியாக மேம்பட்டு, நவீன தீர்வுகளை அறிமுகம் செய்வதில் முன்னிலையில் திகழ்கின்றது. மொபைல் பண வாடிக்கையாளர் வொலட்கள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் வசூலிப்புகள் நிர்வாக தீர்வுகள், கொடுப்பனவு கேட்வே சேவைகள், LankaQR கொடுப்பனவு தீர்வுகள், முகவர் வங்கிச் சேவை, உள்ளக பண ரெமிட்டன்ஸ் சேவை மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட நிதிச் சேவைகள் போன்றன அடங்கலாக டிஜிட்டல் கொடுப்பனவு சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் தீர்வாக mCash தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
mCash துரித வளர்ச்சி தொடர்பான தனது பயணத்தில், நாட்டில் காணப்படும் மொபைல் பணப் புழக்கத்தில் 58% ஐ தன்வசம் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 100க்கு அதிகமான கட்டணப் பட்டியல் கொடுப்பனவு பங்காளர்கள் மற்றும் நாழிகை வலையமைப்பு பங்காளர்களை mCash கொண்டுள்ளதுடன், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களுக்காக துரித கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.