Home » கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல்

கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல்

280 பேர் பாதிப்பு, இருவர் பலி

by Damith Pushpika
December 17, 2023 7:20 am 0 comment

இந்தியாவின் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் மாத்திரம் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 280 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது கொரோனா தொற்றால் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளாவில் பரவும் கொரோனா தொற்றினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் முதல்முறையாக ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division