Home » தியாகம்

தியாகம்

by Damith Pushpika
December 17, 2023 6:22 am 0 comment

யார் யாருக்காகவோ
தியாகம் செய்திட
பழகி விட்டது இந்த மனது…

பேருந்தில் நிற்க
சிரமப்படும் பெண்
பேராபத்துக்கு மட்டும்
நட்பை நினைவுறுத்தும் நண்பன்

மிகப் பிடித்த ஒன்றை
அடுத்தவருக்கு
கையளிக்கும் தருணம்
விழி நிறைந்த தூக்கத்திலும்
நம்மை எதிர்பார்க்கும்

ஒருவருக்கு கொடுக்கும் நேரம்
பரிசளித்த துரோகத்தை மறந்து
புன்னகைக்க முயற்சிக்கும் நொடி
பேச்சுத் துணைக்கென மட்டும்

தரப்படும் உபசாரம்
அவர்களாய் உடைத்தாலும்
நாமே வலிந்து சென்று
மன்னிப்பு கேட்கும் நிலை
நம்மை போல யாருமில்லையென
மனதைத் திருப்தி
செய்து கொள்ளும் பக்குவமென

யார் யாருக்காகவோ
தியாகம் செய்திட
பழகி விட்டது இந்த மனது…
இருந்தும் நம் மனதுக்காய்

நம் ஆறுதலுக்காய்
நம் சோகங்களையும்
நம் கண்மூடித்தனமான
நம்பிக்கைகளையும்

வேண்டாத எதிர்பார்ப்புகளையும்
மறந்தும் ஒதுக்கியும்
தியாகம் செய்தல்
எத்தனை நலம்
அது தான்
நமக்கு நாமே செய்யும்
பெரும் நன்றிக் கடனும் கூட!

ஷப்ரா இல்முத்தீன் அட்டாளைச்சேனை

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division