ரயில்வே திணைக்களத்தின் வருமானத்தை அடுத்த வருடம் முதல் 500 கோடி ரூபாவினால் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம். கே. டபிள்யூ பண்டார தெரிவித்தார். இதன்படி, ரயில் பாதைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திணைக்களத்துக்கு சொந்தமான அனைத்து பயன்படுத்தப்படாத கட்டடங்கள் மற்றும் காணிகளை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
திணைக்களத்தின் வருமானத்தை 33 வீதத்தால் அதாவது 500 கோடி ரூபாவினால் அதிகரிக்க திணைக்களம் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய பொது முகாமையாளர், ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
எதிர்காலத்தில் மேலும், ஏற்கனவே வெளித் தரப்பினர் வரி செலுத்தாமல் பயன்படுத்திய அனைத்து காணிகளும் திரும்பப் பெறப்பட்டு, அவையும் நிர்ணயிக்கப்பட்ட வரி முறையின் கீழ் குத்தகைக்கு விடப்படுமென்றார்.