Home » இலகுவாக்கப்படவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை
சிறுவர், பெற்றோரது மன அழுத்தத்தை குறைக்க

இலகுவாக்கப்படவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை

அடுத்த வருடம் முதல் திட்டம்

by Damith Pushpika
December 17, 2023 6:40 am 0 comment

சிறுவர் மற்றும் பெற்றோரது மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, அடுத்த வருடம் முதல் இலகுபடுத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பல முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர் மற்றும் பெற்றோர் பாரிய சிரமங்களையும் மன அழுத்தங்களையும் எதிர்நோக்கி வருவதாக கல்வியாளர்களும் மனநல நிபுணர்களும் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.அடுத்த வருடம் முதல் கல்வி முறைமையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division