367
இலங்கைப் பத்திரிகைத்துறை வரலாற்றில், 33 வருடங்கள் தொடர்ச்சியாகப் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய லங்கா தீப பிரதம ஆசிரியர் சிறி ரணசிங்கவுக்கான பாராட்டு விழா எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.