Home » அவுஸ்திரேலியாவின் தூதுவராக கோபால்

அவுஸ்திரேலியாவின் தூதுவராக கோபால்

புதிய தூதுவராக சந்தோஷ் ஜா

by Damith Pushpika
December 17, 2023 6:00 am 0 comment

இலங்கைக்கான இந்திய தூதுவராக பணியாற்றிய கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா பொறுப்பேற்கவுள்ளார். கோபால் பாக்லே கடந்த 2020 மேயில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் இருதரப்பு கூட்டுறவில் பல ஒப்பிடமுடியாத மைல்கற்களைக் தொட்டிருந்தது.

இந்தியா-இலங்கை உறவுகளில் பல மகுட சாதனைகளை நிகழ்த்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களுக்கு உதவும் வகையில் 04 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்திருந்தார். திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கூட்டு முயற்சியின் அபிவிருத்தி மற்றும் பாவனைக்கான வழிமுறைகள் ஜனவரி 2022 இல் CPC & LIOC க்கு இடையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதை ஒரு சிறப்பம்சமாக குறிப்பிடலாம். அவரது கண்காணிப்பின் கீழ், கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இந்தியா 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகளை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி, ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள், திரவ மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றை இலங்கைக்கு வழங்கியது. மேலும், இந்த காலகட்டத்தில் இலங்கைக்கான மனிதாபிமான விநியோகங்களை விரைவுபடுத்துவதற்காக இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் பங்களிப்பு சிறப்பாக பயன்படுத்தப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிக ஈடுபாடு அவரது பதவிக்காலத்தில் பெரும் ஊக்கத்தை பெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பு, இன்டர்கிரிட் இணைப்பு, திருகோணமலை அபிவிருத்தி, UPI-விண்ணப்ப ஏற்பு மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுகள், INR- குறிப்பிடப்பட்ட வர்த்தக தீர்வுகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

2021 அக் டோபர் மாதம் குஷிநகரில், சுமார் 100 துறவிகளை அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை-யாழ்ப்பாண விமானங்கள் மீண்டும் ஆரம்பித்தல் மற்றும் படகுச் சேவைகளை மீண்டும் ஆரம்பித்தல் போன்ற பல்வேறு பரிமாணங்களின் இணைப்பானது வலுவடைந்தது.

இந்தியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக சந்தோஷ் ஜா பொறுப்பேற்கிறார். சந்தோஷ் ஜா, தற்போது பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division