Home » மிகச் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை வென்றுள்ள நெஸ்லே லங்கா நிறுவனம்

மிகச் சிறந்த ஏற்றுமதியாளர் விருதை வென்றுள்ள நெஸ்லே லங்கா நிறுவனம்

by Damith Pushpika
December 17, 2023 6:00 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற 25 வது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில் தேங்காய் கொப்பரைத் துறையில் 2021/2022 மற்றும் 2022/2023 நிதியாண்டுகளுக்கான மிகச் சிறந்த ஏற்றுமதியாளர் என்ற விருதை நெஸ்லே லங்கா பெற்றுள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்பிற்குரிய விருதுகள், நாட்டின் ஏற்றுமதித் துறையில் மிகச் சிறந்த பங்களிப்புக்களை வழங்கியுள்ள நிறுவனங்களுக்கு அங்கீகாரமளிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

1986 ஆம் ஆண்டில் மெகி தேங்காய்ப் பால்மாவை அறிமுகப்படுத்திய நெஸ்லே, அன்றுதொட்டு 37 ஆண்டு கால செயற்பாடுகளின் மூலமாக இலங்கையில் 6,000 க்கும் மேற்பட்ட இலங்கை விவசாயிகளுக்கு ஆதரவளித்துள்ளதுடன், அவர்களது நலனை தொடர்ச்சியாக மேம்படுத்தி வந்துள்ளது. கடந்த ஆண்டில் 96 மில்லியனுக்கும் மேற்பட்ட தேங்காய்களை இந்நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதுடன், ரூபா 6.2 பில்லியன் தொகையை அதற்காக செலுத்தி கிராமிய சமூகங்களை மேம்படுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் தேங்காய்ப் பால்மாவை ஏற்றுமதி செய்யும் மிகப் பாரிய நிறுவனங்களில் ஒன்றாக, 2022/23 ஆண்டில் ஏற்றுமதி வருவாயாக ரூபா 10.72 பில்லியன் தொகையை இலங்கைப் பொருளாதாரத்திற்கு பங்களித்துள்ளது.

மேலும், நெஸ்லே தெங்கு அபிவிருத்தித் திட்டத்தினூடாக, சமூகத்தின் நலனை மேம்படுத்தும் அதன் முயற்சியில் 4,500 கிராமிய குடும்பங்களுக்கு தனது ஆதரவை இந்நிறுவனம் வழங்கியுள்ளதுடன், இலவச கலப்பு தென்னம்கன்றுகள், தொழில்நுட்ப வழிகாட்டல், விரிவான பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அவர்களுக்கு வழங்கியுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division