Home » வெள்ளத்தில் மூழ்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு

வெள்ளத்தில் மூழ்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு

by Damith Pushpika
December 17, 2023 6:40 am 0 comment

* விவசாயமும் முற்றாக அழிவடையும் நிலையில்

* திறக்கப்பட்டுள்ள இரணைமடுவின் 14 வான் கதவுகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதாவது கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களிலும் பல கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கின்றது. விவசாய நிலங்கள் பல வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றது. அது மட்டுமல்லாது பலரது வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்துக்கான நீர்வரத்து மேலும் அதிகரிப்பதனால் அதன் 14 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்றன.

இதனால் கவிவசாயமும் முற்றாக அழிவடையும் நிலையில்விவசாயமும் முற்றாக அழிவடையும் நிலையில்ண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன. தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 394 குடும்பங்களைச் சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு வழங்குவதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுகாய் ஆகிய பிரதேசங்களிலே அதிகளவான மழை பதிவாகி இருக்கின்றது.

இதனால் குறித்த பிரதேசங்களில் வெள்ளப் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மாந்தை கிழக்கையும் துணுக்காய் பிரதேசத்தையும் இணைக்கின்ற தரைவழிப்பாதைகளான விநாயகபுரம், பாண்டியன் குளம், சிவபுரம், பாண்டியன் குளம் வீதிகளை குறுக்கறுத்து பாலியாற்று நீர் பாய்வதனால் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இரண்டு நாட்களுக்கு மேலாக குறித்த வீதிகள் துண்டிக்கப்பட்டு காணப்படுகின்றன. இதைவிட பாதிக்கப்பட்ட சிலர் உறவினர், நண்பர்கள் வீடுகளிலே தங்கி இருக்கிறார்கள் கடந்த காலங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இவ்வாறான பாரதூரமான அளவில் எதுவும் ஏற்படவில்லை நான்கு வருடத்துக்கு ஒரு தடவை இவ்வாறான வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதாக குறித்த பகுதிகளில் உள்ள வயோதிபர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் நீர்த் தேக்கங்களில் இருந்து நீர் வெளியேறுதல், வான் பாய்தல் மற்றும் வெள்ள அனர்த்தங்களை பார்வையிடுவதற்கு செல்வோர், தங்களுடைய பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அவதானமாக செயல்படுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதே நேரம் தற்போது குறித்த சில பிரதேசங்களில் குளங்களில் நீர்க்கசிவுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ள குளங்கள் படையினரின் உதவியுடன் மீளமைத்து உடனடி தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யது பாஷ்கரன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division