Home » வெற்றியாளராக தெரிவான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி

வெற்றியாளராக தெரிவான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி

by Damith Pushpika
December 17, 2023 6:40 am 0 comment

நாட்டின் புத்தாக்கமான மற்றும் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரும், முன்னணி பொதுப் பட்டியலிடப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பி.எல்.சியின் துணை நிறுவனமுமான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பி.எல்.சி இந்தியாவின், மும்பை நகரில் நடைபெற்ற நான்காவது Emerging Asia காப்புறுதி ஒன்றுகூடல் மற்றும் விருதுகள் 2023 நிகழ்வில், காப்புறுதி பரவலாக்கத்துக்காக சிறந்த தந்திரோபாயங்கள் – இலங்கை எனும் விருதை சுவீகரித்தது.

இந்திய வர்த்தக சம்மேளனத்தினால் (ICC) ஏற்பாடு செய்யப்பட்ட Emerging Asia காப்புறுதி ஒன்றுகூடல் மற்றும் விருதுகள் நிகழ்வினூடாக, ஆசியாவின் சிறந்த காப்புறுதி சேவை வழங்குநர்களின் சாதனைகளை கௌரவிக்கப்படுகின்றது. பிராந்தியத்தில் காப்புறுதியை ஊக்குவிப்பதற்கு பங்களிப்பு வழங்கும் முயற்சிகளை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது. கிளைகளின் எண்ணிக்கை, முகவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் வளர்ச்சி வீதம், CAGR திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் சமூகத்தினுள் காப்புறுதி அணுகலை அதிகரிக்கச் செய்வதற்காக டிஜிட்டல் செயற்பாடுகளை பின்பற்றல் போன்ற பல்வேறு முக்கியமான காரணிகளை கவனத்தில் கொண்டு கடுமையான வினைத்திறன்சார் மதிப்பீட்டைத் தொடர்ந்து, ஆர்பிகோ இன்சூரன்ஸ் பி.எல்.சிக்கு இந்த விசேட ICC விருது வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division