Home » இரட்டை இலக்கப் பெறுமதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்

இரட்டை இலக்கப் பெறுமதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்

by Damith Pushpika
December 17, 2023 6:34 am 0 comment

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னணி செயற்பாட்டாளரான யூனியன் அஷ்யூரன்ஸ், 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

துரித வளர்ச்சியை வெளிப்படுத்தி, 2022ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தேறிய செலுத்திய கட்டுப்பணப் பெறுமதியில் 14% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இது துறையின் வளர்ச்சி வீதமான 11% விட உயர்வாக பதிவாகியிருந்தது.

குறிப்பாக, ஆயுள் காப்புறுதித் துறையில் 4ஆவது மாபெரும் சந்தைச் செயற்பாட்டாளர் எனும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை நிறுவனம் எய்தியிருந்தது. 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 12% மொத்த சந்தைப் பங்கை கொண்டிருந்தது. மிகைப் பெறுமதி மாற்றங்களை தவிர்த்து, வரிக்கு பிந்திய இலாபம் 74% இனால் அதிகரித்திருந்தது. இதில், 2022ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் திரட்டப்பட்ட உயர் முதலீட்டு வருமானங்களினூடாக பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் சந்தை மூலதனவாக்கம் 2023 மூன்றாம் காலாண்டில், 46% வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 23.9 பில்லியனாக பதிவாகியிருந்தது.

மூலோபாய ரீதியில் சொத்துக்களை ஒதுக்கீடு செய்திருந்ததனூடாகவும், உயர் வட்டி வீதங்கள் நிறைந்த சூழலிலும், நிறுவனத்தினால் 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், முதலீட்டு வருமானத்தில் 54% எனும் உயர் வளர்ச்சியை எய்த முடிந்திருந்தது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division