37
காரிருள் சூழ்ந்த பூமி
காரிருள் மனம் படைத்த மாந்தர்
காரிருளாய் பரந்த நோய்கள்
காரிருளாய் மறைந்த மாந்தர்
காரிருளாய் யாவுமே
ஆனதொரு நாளில்
காரிருளில் பேரொளியாய்
காரிருள் நீக்கி பேரொளி தர
கருணை மகன் பிறந்தான்
கார்கால மேகம் சூழ் மாதமதில்
காரிருளை நீக்கி
பரிசுத்தமாக்கினான்
கண் திறந்து பார்த்திடுவோம்
கருணையாளனை