Home » ஐக்கிய அரபு இராச்சியத்தில் விரைவில் பௌத்த விகாரை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் விரைவில் பௌத்த விகாரை

அமைச்சர் அலி சப்ரியின் யோசனைக்கு இணக்கம்

by Damith Pushpika
December 10, 2023 6:10 am 0 comment

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பௌத்த விகாரையொன்றை நிர்மாணிப்பதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்பட ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் எச்.எச்.ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரியும் இலங்கையர் உட்பட அனைத்து பௌத்த சமூகத்தினர் சார்பாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பௌத்த விகாரை நிர்மாணிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள் விடுத்தார்.

டுபாயில் நடைபெற்ற COP 28 மாநாட்டைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் எச்.எச்.ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை கடந்த திங்கள் (04) இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்துக் கலந்துரையாடிய போதே, இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division