Home » தொடங்கிவிட்டது பண்டிகைக் காலம் ….

தொடங்கிவிட்டது பண்டிகைக் காலம் ….

by Damith Pushpika
December 10, 2023 6:00 am 0 comment

பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதால், சம்பளம் வந்தவுடன் மக்கள் பொருட்கள் வாங்கத் தொடங்கிவிடுவார்கள் அதற்கு சம்பளம் மட்டுமே போதுமானதாக இருக்காது அதற்காக அடுத்து அவர்கள் நாடுவது கடன் அட்டைகளைத்தான். பொருட்கள் வாங்குவதற்குப் பணம் செலுத்துவதற்குப்பிறகு சில நாட்கள் கழித்து பணம் செலுத்த அனுமதிக்கின்றனர். இதனுடன், கடனட்டைகளும் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோரை உருவாக்கவும் உதவுகின்றன. கடனட்டைகள் மிகவும் முக்கியமானவை. எனவே வாடிக்கையாளர்கள் அவற்றை சரியாக பயன்படுத்தவேண்டும் அவ்வாறு இல்லை அவசர தேவைக்கும் கடன் வாங்க இயலாமல் போகலாம், அதனால் கடன் வரவு செலவு அறிக்கைகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். எதற்காக எந்த கட்டணத்திற்கு நீங்கள் கடனட்டையைப் பயன்படுத்தியுள்ளீர்கள்? உங்கள் கடனட்டையின் எண்கள் மற்றும் விதிமுறைகளை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், வரம்புக்கு மேல் செலவழிப்பீர்கள், பின்னர் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் கடனட்டை அறிக்கையில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்களை பார்ப்போம்…

1. பரிவர்த்தனை கட்டணத்தை அறிந்து கொள்ளுங்கள்

கடனட்டை ரசீதில் உள்ள கூடுதல் பரிவர்த்தனை கட்டணங்களை பயனர்கள் முழுமையாக சரிபார்க்க வேண்டும். வங்கிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பது அடிக்கடி நடக்கிறது அவை குறித்த புகார்களும் அதிகமாக வருகின்றன. அதற்காக அவர்கள் நிலுவைத் தொகையையும் வசூலிக்கலாம்.

2. கடன் வரம்பை சரிபார்க்கவும்

கடனட்டை வரம்பை நீங்கள் சரிபார்த்தால், நிலுவைத் தொகை மற்றும் கடன் வரம்பு குறித்த புதுப்பித்த நிலையில் இருக்க இவை உங்களுக்கு அதிகமாக உதவும்.

3. பரிசுப்புள்ளிகள்

கடனட்டை வைத்திருப்பவர்கள் காலாவதியாகும் முன் தங்கள் பரிசுப்புள்ளிகளைப் பயன்படுத்த வேண்டும். அறிக்கையின் உள்ளே கடனட்டையில் கிடைக்கும் புள்ளிகள் புதிய சலுகைகளில் சேர்க்கப்பட்டிருக்கும், இது கடனட்டை பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division