Home » விசாரணைகளை 2024இல் நிறைவு செய்ய தீர்மானம்
காணாமல் போனோருக்கான அலுவலக

விசாரணைகளை 2024இல் நிறைவு செய்ய தீர்மானம்

சபையில் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ

by Damith Pushpika
December 3, 2023 7:30 am 0 comment

காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த வருடத்தில் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

புதிய நிர்வாகத்தின் கீழ் 4,795 முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கான வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

“காணாமல் போனார் அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்போது வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்த அலுவலகத்துக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 62 முறைப்பாடுகள் தொடர்பாக மாத்திரமே கடந்த காலத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், புதிய நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் 4,795 முறைப்பாடுகள் தொடர்பாக பூர்வாங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அடுத்த வருடத்தினுள் அலுவலகத்துக்கு கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளையும் நிறைவு செய்ய முடியுமென்பதுடன், இதன் பின்னர் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ள முடியும்” என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division