Home » கட்டார் வாழ் இலங்கை மற்றும் இந்திய ஆளுமைகளை கெளரவிக்கும் ஸ்கை விருது விழா

கட்டார் வாழ் இலங்கை மற்றும் இந்திய ஆளுமைகளை கெளரவிக்கும் ஸ்கை விருது விழா

by Damith Pushpika
December 3, 2023 7:21 am 0 comment

கட்டார் வாழ் இலங்கை மற்றும் இந்திய ஆளுமைகளை கெளரவிக்கும் ஸ்கை தமிழ் விருது- 2023 விழா ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித்தின் தலைமையில் இந்திய கலாசார மையத்தில் உள்ள அசோகா ஹோலில் கடந்த வியாழன்று நடைபெற்றது. தினகரன், தினகரன் வாரமஞ்சரி, துணிந்தெழு சஞ்சிகை ஆகியவற்றின் ஊடக அனுசரணையில் இடம்பெற்ற இவ்விழாவில், பிரதம அதிதியாக கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீனும் கௌரவ அதிதியாக இந்திய கலாசார மையத்தின் பொதுச் செயலாளர் மோகன் குமாரும் சிறப்பு விருந்தினராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் இலக்கிய புரவலர் ஹாசிம் உமரும், இலங்கை தேசிய பத்திரிகைகளான தினகரன், தினகரன் வாரமஞ்சரின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவரும் கலந்து கொண்டனர்.இவ்விழாவில், கல்வி, கலை, விளையாட்டு, வணிகம், சமூக செயற்பாடு, ஊடகம், எழுத்து மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சாதித்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Fea100_compressed (1)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division