தமன்னாவுடன் திருமணம் எப்பொழுது என்கிற கேள்விக்கு அவரின் காதலரான நடிகர் விஜய் வர்மா வித்தியாசமாக பதில் அளித்திருக்கிறார்.நடிகை தமன்னாவும், விஜய் வர்மாவும் காதலிப்பதாக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பேசப்படுகிறது. அண்மையில் தான் காதலை இருவரும் உறுதி செய்தார்கள். தமன்னாவும், விஜய் வர்மாவும் ஜோடியாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். டின்னர் சாப்பிட ஹோட்டல்களுக்கு செல்கிறார்கள். இதை எல்லாம் பார்க்கும் ரசிகர்களோ, திருமணம் எப்பொழுது என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.விஜய் வர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, இந்த கேள்விக்கான பதிலை என் அம்மாவிடம் கூட நான் கூற முடியாது. அதனால் உங்களுக்கும் பதில் அளிக்க முடியாது என்றார். விஜய் வர்மா சொல்வதை பார்த்தால் கல்யாணம் இல்லையா தமன்னா என அவரின் ரசிகர்கள் ஒரு பக்கம் லைட்டா டென்ஷன் ஆகியிருக்கிறார்கள்.கல்யாணம் எப்பொழுது மகனே என விஜய் வர்மாவிடம் அவரின் அம்மா அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறாராம். தமன்னா வீட்டிலும் ஷாதி எப்போம்மா பண்ணுவ என பெற்றோர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரு வீட்டாரும் கொடுத்து வரும் பிரஷரால் விஜய் வர்மாவும், தமன்னாவும் விரைவில் திருமண தேதியை அறிவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.திருமண தேதியை எதிர்பார்த்த நிலையில் விஜய் வர்மாவோ, அது குறித்து பதில் அளிக்க முடியாது என தெரிவித்திருப்பது தமன்னா ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. இந்த காதல் நிச்சயம் திருமணத்தில் தான் முடியும் என நம்புகிறோம். விஜய் வர்மா தான் உங்களுக்கு சரியான ஆள். இந்த டிசம்பரிலேயே திருமணத்தை முடித்துவிட்டால் நல்லது. இனியும் திருமணத்தை தள்ளிப் போடுவது சரி அல்ல தம்மு என்கிறார்கள் ரசிகர்கள்.
தமன்னா திருமணம் எப்பொழுது?
54
previous post