சமீப காலமாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக இருப்பது அமீர் மற்றும் பருத்திவீரன் விஷயம் தான். நடிகரும் இயக்குனருமான அமீர் பருத்திவீரன் படத்தின்போது நடந்த கசப்பான விஷயங்களை பற்றி கூற, அதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச என இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் மிக பெரிதாக மாறியிருக்கிறது.
இப்போது இந்த பஞ்சாயத்தினால் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திற்கு புது சிக்கல் வந்துள்ளது.நடிகர் கார்த்தி நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பருத்திவீரன். இந்த படத்தை இயக்குனர் அமீர் இயக்கினார். பருத்திவீரன் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உடனான கசப்பான நிகழ்வுகளை இயக்குனர் அமீர் பகிர்ந்து வருகிறார். அமீருக்கு ஆதரவாக பல திரை பிரபலங்களும் அவர்களது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
அமீர் பேசிய விஷயங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் அவரது கருத்துக்களை பேசி வருகிறார். ஞானவேல் ராஜா, நடிகர் சூர்யாவின் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குனர் மற்றும் நடிகரான அமீர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார்.