Home » தம்பிக்கு

தம்பிக்கு

by Damith Pushpika
December 3, 2023 6:19 am 0 comment

படித்திட வேண்டும் தம்பி – அதுபோல்
நடந்திட வேண்டும் தம்பி
சிரித்திட வேண்டும் தம்பி – நல்ல
சிந்தனை வேண்டும் தம்பி

அறிவும் இருக்கு தம்பி – நல்ல
ஆற்றலைப் பெருக்கு தம்பி
கைகளை நம்பித் தம்பி – உன்
கடமையை ஆற்று தம்பி

பூக்களைப் போல சிரிக்கனும் – நாளும்
பொன்னென மனது இருக்கணும்
தேனீக்களைப் ​போல சேரணும் – இனிக்கும்
தேனெனப் பேச்சு இருக்கனும்

இருப்பதை வைத்து வாழணும் – கையில்
கிடைப்பதைக் கொண்டு மகிழணும்
இதயத்தைக் காட்டி அழைக்கணும் – அன்பாய்
இருப்பதை ஊட்டி அணைக்கணும்

கல்லொளுவை பாரிஸ் மள்வானை

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division